ஒரு நம்பரை அதே நம்பரால் பெருக்கினால் அதை Square என்கிறோம்.
அதை இப்படியும் செய்யலாம்.
67 x 67 என்பதை பெருக்க
67 எண்ணின் அருகிள் உள்ள பத்து எண்ணை எடுத்துக் கொள்ளவும்
10,20,30,40,50,60,70,90,100 இப்படியான பத்து பெருக்கல் எண்களில் எது 67 யின் அருகே வருகிறது.
70 வருகிறது.
67 + 3 = 70
அதே ”3” 67 யில் இருந்து கழியுங்கள்.
67- 3 = 64
67 + 3 = 70
67- 3 = 64
இந்த 70 யையும் 64 ஐய் பெருக்குங்கள்.
70 x 64 = ஏழு நாலு இருபத்தியட்டு.. எட்டப் போட்டு இரண்ட வெச்சிகிட்டு. ஏழு ஆறப் பெருக்கினா 42 .
42 கூட இரண்ட கூட்டினா 44 அப்போ 448. கூட சைபர் சேர்த்தா 4480.
இப்போ 67 கூட 3 எண்ணத்தான் கூட்டினோம் கழிச்சோம்.
அந்த 3 அதே 3 ஆல பெருக்கிக் கொள்ளவும்.
3 x 3 = 9
அந்த 9 எண்ண 4480 கூட கூட்டவும். 4489
அப்போ 67 x 67 = 4489
1. கொடுக்கப்பட்டுள்ள எண்ணின் பக்கத்து பத்து பெருக்க எண்ணை எடுக்கவும்,
67 அருகாமையில் உள்ள பத்து பெருக்க எண் 70
2. எண்ணுக்கு அருகாமை பத்து பெருக்க எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் பார்க்கவும். 70- 67 = 3
3. வித்தியாசம் வரும் எண்ணை கொடுக்கப்பட்ட எண்ணோடு கூட்டி ஒரு எண்ணையும், கழித்து ஒரு எண்ணையும் பெறவும்.
67 - 3 =64
67 +3 = 70
4. அவை இரண்டையும் பெருக்கவும்.
64 x 70 = 4480
5. விடையாக வந்த எண்ணோடு “வித்தியாச எண்ணை”
அதே எண்ணோடு பெருக்கி வர்க்கம் கண்டுபிடித்து கூட்டவும்
இங்கே வித்தியாச எண் 3.
3 x 3 = 9
4480 + 9 = 4489
6. இதுதான் கொடுக்கப்பட்ட எண்ணின் வர்க்கம் என்ற Square ஆகும்.
67 x 67 என்று பெருக்க வேண்டுமானால்
67 x 7 பெருக்கி. பின் 67 x 6 பெருக்கி. அதில் கிடைக்கும் இரண்டு எண்களை Places மாற்றி கூட்ட வேண்டும்.
ஆனால் இம்முறையில் அது எளிதாக்கப்படுகிறது.
64 x 70 என்று வரும் போது 64 x 7 பெருக்கி அதோடு சேர்த்து சைபர் போட்டால் போதுமானது.
வித்தியாச எண்ணின் வர்க்கம் கண்டுபிடிப்பது எளிதுதான். கண்டுபிடித்து கூட்டி விட வேண்டியதுதான்.
வர்க்கம் கண்டுபிடிப்பதற்கு இதுவும் ஒருமுறை என்று எடுத்து ரசிக்கலாம்..
👇👇👇
No comments:
Post a Comment