தசாவதாரம் படத்தில் கமலஹாசன் பத்து வேடங்களை ஏற்று நடித்ததைப் போல கணிதத்தில் எண்களும் கூட இடத்துக்கு தக்கவாறு உருவத்தை மாற்றி வேடமிட்டு நடிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம்… இது உண்மைதான்!
வாருங்கள்… ஓர் சிறு உதாரணம் மூலம் ஓர் எண் எவ்வாறு ஐந்து வேடங்களில் நடிக்கிறது என்பதை உங்களுக்கு காண்பிக்கிறேன்!
அந்த ஐந்து வேடங்களின் மன்னிக்கவும்… அந்த ஐந்து வடிவங்களின் உருவத்தை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறீர்களா?
இல்லை என்றால் பார்க்கலாம்… வாருங்கள்!
1.பின்ன வடிவம்
2.சதவீத வடிவம்
3.விகித வடிவம்
4.தசம வடிவம்
5.வகுத்தல் வடிவம்
ஆம்… இவைதான் அந்த வடிவங்கள்!
ஓர் வடிவத்தில் இருக்கின்ற எண்ணை மற்றொரு வடிவத்திற்கு எளிதாக மாற்ற முடியும்!
எப்படி என்று பார்க்கலாமா?
½ என்பது பின்ன வடிவம்
இதனை சதவீத வடிவமாக மாற்ற 1/2×100% = 50% என்று எழுத வேண்டும்!
½ என்பது பின்ன வடிவம் இதனை விகித வடிவமாக மாற்ற 1:2 என்று எழுத வேண்டும்!
½ என்பது பின்ன வடிவம் இதனை தசம வடிவமாக மாற்ற 0.5 என்று எழுத வேண்டும்!
½ என்பது பின்ன வடிவம் இதனை வகுத்தல் வடிவமாக மாற்ற 1÷2 என்று எழுத வேண்டும்!
பின்ன வடிவத்தில் இருந்து மற்ற நான்கு வடிவங்களுக்கு எப்படி மாற்றி எழுதுவது என்பதைப் பார்த்தோம்!
உண்மையில் எந்த வடிவம் கொடுக்கப் பட்டாலும் மற்ற வடிவங்களைக் கண்டு பிடிப்பது மிகமிக எளிதான ஒன்றுதான்…
தேவை கொஞ்சம் முயற்சியும்… பயிற்சியும் மட்டுமே!
இப்போது உங்களுக்கான கேள்வி...
25 என்ற எண்ணை ஐந்து வடிவங்களில் யார் எழுதுகிறீர்கள் பார்க்கலாம்…
நட்புடன்,
கு.சீனுவாசன்
பட்டதாரி ஆசிரியர்(கணிதம்)
பேசி:8608670365
No comments:
Post a Comment