Tuesday, 30 July 2019

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

டாக்டர் *முத்துலட்சுமி ரெட்டியின்* பிறந்த நாள் இன்று..!
(30.07.1886)
🌿☘🌺🌷🌸💐

புதுக்கோட்டை சமசுத்தானத்தில் தேவதாசி குலத்தில் பிறந்தவர்..

கல்லூரியில் படிக்க வேண்டும் என்று இவர் விண்ணப்பித்தார்.

பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர் அதிர்ந்தார்கள்.

'ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் எப்படி ஒரு பெண்ணை அனுமதிப்பது' என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.

புதுக்கோட்டை மன்னரான பைரவத் தொண்டைமானுக்கு இந்த செய்தி எட்ட... அவரின் ஆணையால், முதல் பெண் மாணவியாக நுழைந்தார் முத்துலட்சுமி. அங்கேயும் அசத்தினார்.

Madras Medical College-ல் இடம் கிடைத்தது. அங்கே பெண்களுக்கு என்று தனி விடுதி இல்லை. தெரிந்தவரின் வீட்டில் தங்கிப் படிக்க வேண்டிய சூழல்.

ஆண் மருத்துவ மாணவர்கள் சீண்டல்களில் ஈடுபட்டார்கள். வகுப்பிற்கு வீட்டில் இருந்து வருகையில் திரை போட்ட வாகனத்திலேயே வருவார்.

‘போயும், போயும் பெண்ணெல்லாம் படிக்கப் போகிறாள்’ என்றெல்லாம் வசைபாடுவது மக்களின் வழக்கமாக இருந்தது.

‘என் வகுப்பிற்குள் ஒரு பெண் நுழையக்கூடாது’ எனக் கர்னல் ஜிப்போர்ட் கர்ஜித்தார்.

முத்துலட்சுமி வகுப்பிற்குள் நுழையவில்லை. தேர்வு முடிவுகள் வந்தன.

முத்துலட்சுமி கண்டிப்பிற்கும், கச்சிதத்திற்கும் பெயர் பெற்ற ஜிப்போர்ட்டின் அறுவை சிகிச்சை தாளில் முதல் மதிப்பெண்ணைப் பெற்று இருந்தார்.

அதற்குப் பிறகே முத்துலட்சுமியை தன்னுடைய வகுப்பில் அவர் அனுமதித்தார்.

முத்துலட்சுமி மருத்துவப் பட்டம் பெற்ற தருணத்தை , ‘இந்தக் கல்லூரி வரலாற்றின் பொன்னாள்’ என்று சிலிர்த்து ஜிப்போர்ட் எழுதினார்.

1927-1930 காலத்தில் சட்டசபையில் நுழைந்தார். அப்படி நுழைந்த காலத்தில் துணைத் தலைவராகவும் இயங்கினார். பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், பால்ய விவாகத் தடை சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் முதலிய பல்வேறு சட்டங்கள் அவரின் முயற்சியால் இயற்றப்பட்டன.

குறிப்பாகத் தேவதாசி முறை ஒழிப்புக்காகத் தீவிரமாக இயங்கினார். அதற்குக் காந்தி, பெரியார் எனப் பல்வேறு தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகியது.

சத்தியமூர்த்தி "கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைக் காக்க, கலைகளைப் பேண தேவதாசி முறை தேவை..

தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது.

சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோயில் பணிகளுக்கென்றே படைக்கப்பட்டவர்கள்.

அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால், பரதநாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதக்கலை அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும்” என்றார்.

முத்துலட்சுமி “உங்களுக்கு அக்கா தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் எந்தப் பெண்ணையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா?" என்று கேட்டதோடு சத்தியமூர்த்திப் பேயறைந்து அமர்ந்துவிட்டார்.

பாரீஸ் வரை சென்று பெண்களின் உரிமை சார்ந்த குரலை முத்துலட்சுமி எழுப்பினார். திருமணமே வேண்டாம் என்று இருந்தவர் சுந்தர ரெட்டியை மணந்து கொள்ளச் சம்மதித்தார்.

‘திருமண உறவில் இருவரும் சமமானவர்கள். என்னுடைய விருப்பங்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது.’

-போன்ற விதிகளைச் சுந்தர ரெட்டி ஏற்ற பின்னே திருமணம் செய்து கொண்டார். சடங்குகள் இல்லாத திருமணமாக அது அமைந்தது.

தேவதாசி முறையைச் சட்டம் இயற்றி மட்டுமே ஒழித்துவிட முடியாது என்கிற தெளிவு முத்துலட்சுமி அவர்களுக்கு இருந்தது.

தேவதாசி முறை ஒழிப்பால் ஆதரவற்றுப் போன பெண்களுக்கு என்று அடைக்கலம் தர இரண்டு இல்லங்களே சென்னையில் இருந்தன.

ஒன்று பிராமணப் பெண்களுக்கு மட்டுமானது. இன்னொன்று பிராமணர் அல்லாதவர்களுக்கு உரியது.

நள்ளிரவில் அவரின் வீட்டு கதவை மூன்று இளம்பெண்கள் தட்டி அடைக்கலம் கேட்டார்கள். தான் பொறுப்பில் இருந்த அரசு மருத்துவமனையின் கீழ்வரும் விடுதியின் பொறுப்பாளரை பார்க்க சொல்லி அனுப்பினார்.

அந்தப் பெண்களின் குலத்தின் பெயரை சொல்லியும், அவர்களின் பண்புகளைக் கேவலப்படுத்தும் வகையிலும் வசைபாடல்களை நள்ளிரவில் அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

கண்ணீரோடு முத்துலட்சுமி அவர்களின் வீட்டுக்கதவை தட்டினார்கள். அந்தக் கணமே தன்னுடைய வீட்டையே பெண்களுக்கான ஆதரவு இல்லமாக மாற்றினார்.

சில காலத்துக்குப் பிறகு ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தருவதற்காக என்று ‘அவ்வை இல்லத்தை’ உருவாக்கினார்.

அவரிடம் அடைக்கலமான அந்த மூன்று பெண்களும் மருத்துவர், ஆசிரியர், செவிலியர் என்று சாதித்துக் காட்டினார்கள். அவ்வை இல்லத்தின் பெண்களின் கல்வியை முத்துலட்சுமி தானே கவனித்துக் கொண்டார்.

தான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போதே புற்றுநோய்க்கு என்று தனியான ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

தன்னுடைய தங்கையைப் புற்றுநோய்க்கு இளம் வயதிலேயே இழந்ததன் வலி அது. சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் புற்றுநோய் சிகிச்சை தர வேண்டும் என்று கனவு கண்டார்.

இலவசமாகச் சேவை செய்ய வேண்டும் என்று அவர் தன்னுடைய கனவை விளக்கினார். விடுதலைக்குப் பிறகு அப்போதிருந்த மருத்துவ அமைச்சரிடம் உதவி கேட்டார்.

“ஏன் மக்கள் புற்றுநோயால் மட்டும் தான் இறக்கிறார்களா?” என்று துடுக்காகப் பதில் வந்தது. சுகாதாரச் செயலாளர் , ‘உங்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால்…’ என்று பீடிகை போட்டு இந்த மாதிரி திட்டமெல்லாம் தேறாது என்று எழுதியிருந்தார்.

அமெரிக்காவில் போய் மேற்படிப்பு படித்துவிட்டு வந்திருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார். அவரோடு அரசு மருத்துவ வேலையைத் துறந்திருந்த சாந்தாவும் இணைந்து கொண்டார்.

அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கான அடித்தளம் போடப்பட்டது. பெரிதாகக் கையில் பணம் இல்லை என்றாலும், மக்களின் உயிர் காக்க ஓடி, ஓடி நிதி திரட்டினார். எளிய இடத்தில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை 12 படுக்கைகளோடு எழுந்தது.

இன்றைக்கு கிட்டத்தட்ட ஐநூறு படுக்கைகளோடு வருடத்திற்கு இரண்டு லட்சம் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக அவரின் விதை, விழுதுகள் பரப்பி விரிந்துள்ளது.

அரசியல் களத்தில் அயராது இயங்கிய முத்துலட்சுமி தன்னுடைய மருத்துவர் பணியை விட்டுவிடவில்லை. மருத்துவத்தைப் பொருளீட்டும் முதலீடாகப் பார்க்காமல் எளியவர்கள் குறித்த கரிசனத்தோடு இயங்கினார்.

பொது வாழ்க்கையில் மூழ்கி குடும்பத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கவில்லை. அவருடைய தங்கை நல்லமுத்துவை தன்னுடைய செலவிலேயே படிக்க வைத்தார்.

அவர் ராணி மேரி கல்லூரியின் முதல் இந்திய முதல்வராகப் பொறுப்பேற்று சாதித்தார். புதுக்கோட்டையில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிப் புத்துலகை சமைத்த முத்துலட்சுமி ரெட்டியை இன்நாளில் நினைவுகூர்வோம்.

Wednesday, 3 July 2019

இறைவன்

மழை பெய்யும்போது நீங்கள் வைக்கும் பாத்திரத்தின் அளவை பொறுத்து அதில் நீர் நிரம்பும்
மேலும் வைக்கபடும் அந்த பாத்திரம் காலியாக இருக்க வேண்டும்
ஆகவே
நம்  வாழ்க்கை
வளங்கள் நிறைந்ததா,
அல்லது பற்றாக்குறை நிறைந்ததா என்பது
அவரவர் எண்ணகளின் தன்மையை பொறுத்தே அமையும்.

அதேப்போல

அருள் என்னும் மழை நம்மை ஸ்பரிசிக்கும் போது
நம்முடைய மனதை எந்த அளவு காலியாக வைத்திருக்கிறோமோ அந்த அளவே
நம்முள் அருள் நிறையும் என்பதையும் புரிந்து.
கொள்ள வேண்டும் ...

அருள் ஸ்பரிசம் என்பது....

இறைவன் என்ற சொல் தோற்றத்தைக் குறிக்கிறதா...???
அல்லது
உணர்வு தன்மையைக் குறிக்கிறதா...???

உணர்வு தன்மை என்பதனாலேயே இறை நிலை என்று கூறுவது சரியாகும்.

இந்த அருள் ஸ்பரிசம் சதா நேரமும் நம்மை உயிர்ப்பித்து கொண்டே உள்ளது...

ஆனால் உயிர்ப்பை உணரா நிலை நமக்கு...

ஏன்?

வட்டத்தில் சிக்குண்ட பார்வை...
அத சிக்குண்ட பார்வையைப் பொறுத்து செயல்..

எதுவெல்லாம் எனது என்று வைத்திருக்கிறோமோ,
எனக்கு மட்டும் என்று தக்க வைத்திருக்கிறோமோ,
அதுவரை மனம் திறத்தல் சாத்தியம் இல்லை...

மனம் திரட்டல் என்பது ...

உள்ளதை உள்ளவாறு கண்டுணரும் திறன்.
இந்த திறனுக்கு
மற்றொரு பெயர்தான்
எளிமை என்பது.

எளிமை உணர்வே இருப்பதின் முழுமைத்துவம் காட்டும்.

எப்போது "தான், தனது" என்ற கட்டுகளிலிருந்து மனம் விடுபடுகிறதோ...
அன்று மனக் கதவு தானாக திறக்கப்படும்.

நான் என்ற ஒரு தனி நபர் இல்லை
எனது மட்டும் என்று எதுவும் இல்லை என்று
தனி நிலை ஒழிதலின்போது
மனக் கதவு தானாக திறந்துவிடும்.

பகவான்  இரமணர் கூறுகிறார்
“எந்த இடத்தில் “ கற்பித நான்” மடிகிறதோ,

அந்த இடத்தில் இறைவன் வெளிப்படுகிறான்” என்று.

நான் இறந்தால் என்றால்
இறுதியில் வரும் மரணம் அல்ல
நான் என்ற எண்ணம், செருக்கு, எங்கு மரணிக்கிறதோ அங்கு இறைவன் பிறக்கிறான்
அப்போது எல்லாம் கிடைக்கும்..

இறவன் என்பது இறைதன்மை  தான் என்று தெளிவாக புரிகிறது...

இதனையே பாரதியும்
“இறைவன் தன்மயமானவன்”
இதன் உட்பொருள் "தன்மையானவன்" என்பது சரியாக இருக்கிறது அல்லவா...

“காயிலே புளிப்பதென்ன கண்ணபிரானே....!!!,
நீ கனியிலே இனிப்பதென்ன கண்ணபிரானே....!!!
இந்த இடத்தில் பாரதி நமக்கு கூற வருவது யாதெனில்,
இறைவா, நீ காயிலே புளிப்பாய் இருக்கிறாயே,
கனியிலே இனிப்பாய் இருக்கிறாயே..!!!
என்ற உள்ளதை உள்ளவாறு கண்டு ஏற்ற நிலை.

இன்னும்...
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா,
நின்றான் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா....!!!"
அப்போ இறைவன் என்னவாக இருக்கிறான்...???
காக்கையிலே கருமை நிறமாக இருக்கிறான்
“பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா,
நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா.....!!!”
மரங்களில் பச்சை நிறமாக இருக்கிறன்
“கேட்கும் ஒலிகளெல்லாம் நந்தலாலா,
உந்தன் கீதம் மிக இசைக்குதடா நந்தலாலா.....!!!”
பாரதியின் வழியில் உணர்ந்தால்...
காக்கா கரைகிறதா...???
இல்லை இறைவன் கரைகிறானா...???
காக்கை கரையவில்லை
இறைவா நீ இசை பாடுகிறாய் என்றல்லவா கூறுகிறான்

இதுவே முழுமை உணர்வனுபவம்...

இந்த முழுமை உணர்வினால் ஒன்றை பார்க்கும்போது ஒன்றை தொடும்போது ஒன்றில் வாழும்போது....

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா,
நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா.....!!!”

நெருப்பின் புறத்தன்மை சூடாக இருந்தும் ..
அதன் இயல் தன்மை  இறை உணர்வே என்பதால் அப்போது
அந்த அருள் ஸ்பரிச தீண்டல் இன்பம் உண்டாவதாய் பாடுகிறார் பாரதி...

ஆம் அருளே சூடாய் வெளிப்பாட்டு நிலையில் நெருப்பு என்று கண்டுணரும் முழுமைத்துவம் அங்கு பிறக்கும்...

தீக்குள் விரலை வைத்தால் என்ன ஆகும்.... சுடும்
அப்போ அங்கே இறைவன் சூடாக இருக்கிறான் என்று  பொருள் படும்போது தான் என்ற தனி நிலை காப்பு பயம் நீங்கி இயல் நிலை ஆதி உணர்வில் ஆட் கொள்ள பட்ட சுகமே எஞ்சி நிற்கும் எப்பொழுதும்...

அறி துயில் இரவு அன்பர்கள் அனைவருக்கும்🙏🏻.

Monday, 27 May 2019

பிரார்த்தனை

இதயநிறைவு
இரவு 9 மணி பிரபஞ்சமளாவிய பிரார்த்தனை உள்ளிட்ட, பிரார்த்திக்கும் மனோபாவத்துடனான சங்கல்பங்கள்

நம்மைச் சூழ்ந்துள்ள, காற்றுத் துகள்கள், மனிதர்கள், பறவைகள், மரங்கள்... நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் கடவுளின் நினைவில் ஆழ்ந்து லயித்துள்ளன. அனைத்தும் மூலஆதாரத்துடன் இரண்டறக்கலந்து, அதிகமான அமைதியையும், மிதத்தன்மையையும் வளர்த்து வருகின்றன.
அனைவரும் நற்சிந்தனை, சரியான புரிந்துகொள்ளுதல் மற்றும் வாழ்க்கையில் நேர்மையான அணுகுமுறை ஆகியவற்றை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்கள், செயல்பாட்டில் சரியான அணுகுமுறையையும், நடத்தையில் பூரணத்துவத்தையும் அடைகிறார்கள்.
பிரபஞ்சமளாவிய பிரார்த்தனை: அனைவரும் அன்பாலும் பக்தியாலும் நிரப்பப்படுகிறார்கள் மற்றும், அவர்களுள் உண்மையான நம்பிக்கை வலுவடைந்து வருகிறது என்ற எண்ணத்துடன் 15 நிமிடங்கள் தியானம் செய்யவும்.
பரம்பொருளுக்காக ஏங்கித் தவிக்கும் அனைவரும் சகஜ மார்க்கத்தை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.

உடனடி சுத்திகரிப்பு

இதயநிறைவு
உடனடி சுத்திகரிப்பு

நம்மை ஆழமாக பாதிக்கும் ஏதேனும் அன்றைய தினத்தில் நிகழ்ந்திருந்தால், சுத்திகரிப்பு செய்து நமது அமைப்பிலிருந்து அதன் தாக்கத்தை நீக்க மாலை வரை நாம் காத்திருப்போமா? இல்லை, நாம் அவ்வப்போது அதனை நீக்குகின்றோம்.
"இப்போது என்னை பாதித்துள்ள விஷயம், முதுகுப்புறமாகப் புகைவடிவில் வெளியேறுகின்றது'' என்று ஒரு சூட்சுமமான சங்கல்பத்தை மேற்கொள்ளுங்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு, பதிவு நீங்கிவிட்டது என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படும்போது, அது உண்மையிலேயே வெளியேறிவிட்டது என்ற ஒரு உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளுங்கள். நீங்கள் வகுப்பறையிலோ அல்லது அலுவலக கூட்டத்திலோ இருப்பதால், ஒரு வேளை உங்கள் கண்களை மூட முடியாது போகலாம், என்றபோதிலும் சில நிமிடங்கள் உங்களால் சுத்திகரிப்பு செய்ய முடியும்.

நிலையான நினைவு

இதயநிறைவு
நிலையான நினைவு

இதில் முதல் கட்டமானது, தியானத்தின்போது, ஆன்மீக ஊட்டம் நமக்கு அருளப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு போதுமான அளவு கூருணர்வு படைத்தவர்களாக ஆவதும், பிறகு அதைத் தக்கவைத்துக்கொண்டு, அதைப் பேணிப்பாதுகாத்து – ‘முயன்று அதைப் பெற்று, அதற்கு உயிரூட்டி, அதை உட்கிரகித்துக்கொண்டு, அதனுடன் ஒன்றுகலந்து, இறுதியில் ஒரு ஐக்கிய நிலையை அடைவது (or AEIOU)’ ஆகியவற்றை உள்ளடக்கிய விதத்தில் அதை வளர அனுமதிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுமாகும். நம்முடன் அது ஒன்றுகலக்கும் விதத்தில், அதை நாம் பத்திரமாகப் பாதுகாக்கிறோம். அதனுடன் நாம் ஐக்கியமாகிறோம்.
தியானத்திற்குப் பிறகு, உள்முகமாக நம்மைக் கூர்ந்து கவனித்து, நமது நிலையை அடையாளம் கண்டு, அதனுடன் ஒன்றுகலந்து, அதனை ருசித்து அனுபவித்து, அதற்கு உயிரூட்டி, அதை நம்முடையதாக்கிக்கொள்ள முயற்சி செய்வதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. பிறகு, வளர்வதற்கானதொரு வாய்ப்பு அதற்கு உள்ளது. காலை தியானத்தின்போது, ஒரு குறிப்பிட்ட அளவிலான உணர்வுறுநிலையை நாம் அடைகிறோம். அதை விடாது பற்றிக்கொண்டு, நமது அன்றாட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளும்போது, காலை தியானத்தின்போது பெற்ற நிலையின் மீது, ஒரு முழுமையான பிடிப்பினை, கண்கள் திறந்த நிலையில், நாம் தக்கவைத்துக்கொள்கிறோம்.
உங்களது கண்களைத் திறந்த வண்ணம், அந்த தியான நிலையில் நீடித்திருக்க முயற்சி செய்யவும். உங்கள் இதயத்தில் உங்களை மையப்படுத்திக்கொண்டு, உணர்ந்தறியக்கூடிய நிலையில் இருந்து, உங்கள் இதயத்தால் விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களைச் சுற்றிலும் உள்ள விஷயங்களை நீங்கள் கூர்ந்து கவனிக்கும்போது, உங்கள் கவனத்தை  இதயத்திலேயே வைத்திருக்கவும். உங்களது உள்முக தொலைநோக்குப் பார்வை (radar) திறக்கட்டும். பேணி வளர்க்கப்பட வேண்டிய பழக்கம் இதுவே!
தியான நிலை மேலும் ஆழ்ந்து சென்று, நிலையான நினைவாக ஆகும்போது, உணர்வுறுநிலையின் முழு கற்றையும் (spectrum), உங்களது ஜீவிதத்தின் அஸ்திவாரமாக, உங்களது மையத்துடன் தொடர்பில் இருக்கிறது; மேலும், காலப்போக்கில், அஸ்திவாரமாக இருக்கும் இந்தத் தொடர்பு, அன்பாக மலர்கிறது. வழிகாட்டியானவர் நமக்கு உதவ வருகிறார். இறைவனின் ஆளுமைக்குட்பட்ட இந்தப் பிரதேசத்தில், அவர் அனுபவம் வாய்ந்தவராகவும், சௌகர்யமான நிலையிலும் உள்ளார்; ஆகவே, நமது கவனத்தை ‘நான்’ என்பதிலிருந்து ‘நாம்’ என்பதை நோக்கி அவர் மென்மையாகத் திருப்புகிறார். இந்த ‘நான்’ மற்றும் ‘நாம்’ எனும் இயக்கவியல் வளர்ந்து, உணர்வுறுநிலையின் பல மட்டங்களினூடே காலப்போக்கில் விரிவடைகிறது. உணர்வுறுநிலையின் இந்த மட்டங்களினூடே நாம் கடந்து செல்கையில், மனிதமட்டத்தில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடிவதும் அவருடன்தான். அவரது பிராணாஹுதியின் மூலமாகவும், அவரது ஆதரவின் மூலமாகவும் எந்த அளவு அதிகம் அவர் நமக்கு உதவுகிறாரோ, அந்த அளவு, நமது கவனம் பரிசுகளிலிருந்து பரிசளிப்பவரை நோக்கி நகர்கையில், அவருடைய உதவியை அதிகமாக நாம் பெறப் பெற, அவர்மீது அதிக நன்றியுணர்வு படைத்தவர்களாக நாம் உணர்கிறோம். இந்த நன்றியுணர்வானது, அவரை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகொள்ள வைக்கிறது, சிறிது காலத்திற்குப் பின், அன்பும் உதயமாகிறது. ஒரு கட்டத்தில், மிகுதியான அன்பினை நாம் உணர்கிறோம், அது எவ்விதம் நிகழ்ந்தது என்பது நமக்குத் தெரிவதில்லை. நாம் நேசிப்பவர்களை நாம் எப்போதும் நினைவில்கொள்வதுபோல், அதன் மறு பக்கமும் உண்மையானதே: நாம் அதிகமாக நினைவுகொள்கையில், அதிகமான அன்பு வளர்கிறது.

தியான நிலையில் நாம்ஆழமாக ஈர்த்துக்கொள்ளப்பட்டு

உள்முகமாக மையப்படுத்தப்படுகிறோம்..

இந்த மையப்படுத்தப்பட்ட தன்மையை மிக கவனத்துடன்

நாம்
பராமரிப்போமெனில்
இதனால் விளைகின்ற லயித்துப் போகும் தன்மை

நமது அன்றாட நடவடிக்கைகளில்

பிரதிபலிக்கும். விதத்தில்

அந்த அளவு நமக்குள்ளேயே

  மையப்படுத்தப்பட்ட வர்களாக நாம் ஆகிறோம் ..

இந்த நிரந்தர மையப்படுத்தப்பட்ட தன்மைக்கான மற்றொரு பெயர்

நிலையான நினைவு என்பதாகும்

குறிப்பாக அத்தகையதொரு
லயித்துப் போகும் நிலையைப்

பரிசளித்த ஒருவரிடம்

நாம் நன்றியுடன் இருக்கும் போது

இந்த நன்றியுணர்வில்.

நாம் அப்படியே உருகி கரைந்து போகிறோம்..

இதயநிறைவு பத்து நியமங்கள்

இதயநிறைவு
பத்து நியமங்கள்

நியமம் 1
அதிகாலைக்கு முன்பாகவே விழித்தெழுந்து, நிர்ணயித்துக்கொண்ட நேரத்தில் பிரார்த்தனையை சமர்ப்பித்து தியானம் செய்யுங்கள். சூரியோதயத்திற்கு முன்பே இவற்றைச் செய்து முடிப்பது சாலச் சிறந்தது. தியானத்திற்கென தனி இடத்தையும், இருக்கையையும் அமைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை ஒரே நிலையில் அமரும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உடல் மற்றும் உள்ளத் தூய்மைக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.
நியமம் 2
ஆன்மீக மேம்பாட்டிற்கான பிரார்த்தனையுடன் தியானத்தைத் தொடங்குங்கள். இதயம் அன்பினால் நிரம்பும் வகையில் உங்கள் பிரார்த்தனையை சமர்ப்பியுங்கள்.
நியமம் 3
இறைவனுடன் இரண்டறக் கலப்பதையே லட்சியமாகக் கொள்ளுங்கள். இலட்சியத்தை எய்தும்வரை ஓயாதீர்கள்.
நியமம் 4
இயற்கையுடன் இயைந்திருக்கும் வண்ணம் உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ளுங்கள்.
நியமம் 5
எப்போதும் உண்மையாக இருங்கள். துன்பங்களை, உங்கள் சொந்த நலனிற்காக இறைவனிடமிருந்து வருபவை என ஏற்றுக்கொண்டு, நன்றியுடன் இருங்கள்.
நியமம் 6
அனைவரையும் உங்கள் உடன் பிறப்புகளென பாவித்து அவர்களை அவ்வாறே நடத்துங்கள்.

நியமம் 7
எவரேனும் உங்களுக்குத் தவறிழைத்ததாக உணர்ந்தால், பழிவாங்க விரும்பாதீர்கள். அதற்கு பதிலாக, அது கடவுளிடமிருந்து வருவதாக நினைத்து நன்றியுடன் இருங்கள்.
நியமம் 8
பொருளீட்டுவதில் நேர்மைக்கும், தூய்மைக்கும் உரிய மதிப்பளித்து, கிடைப்பதை நிலையான தெய்வீக சிந்தனையுடன் உண்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
நியமம் 9
மற்றவர்களிடம் அன்பும், பக்தி உணர்வும் சுரக்கும் வகையில் உங்கள் நடத்தையையும், வாழ்க்கை முறையையும் மேன்மையாக அமைத்துக்கொள்ளுங்கள்.
நியமம் 10
இரவு உறங்கும் முன், இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்து, அறியாமல் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோருங்கள். மீண்டும் அவற்றுக்கு இடம் கொடுக்கமாட்டேன் என்ற உறுதியுடன் மன்றாடுகிற மனநிலையில் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்.

இதயநிறைவு தியானம்

இதயநிறைவு
தியானம்
கவனம் சிதறடிக்கப்படாமல் நீங்கள் தியானம் செய்யமுடிகின்ற ஒரு இடத்தை - தினமும் ஒரே இடத்தையும், ஒரு குறித்த நேரத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது. உங்கள் அலைபேசி மற்றும் பிற மின்னணு சாதனங்களை நிறுத்தி வையுங்கள். உங்கள் முதுகு நிமிர்ந்து இருக்குமாறு, ஆனால் விறைப்பாக இல்லாத விதத்தில் அமருங்கள்.
சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கண்களை மென்மையாக மூடிக்கொண்டு ஓய்வாக இருங்கள்.
தேவைப்பட்டால் இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொண்டு, இதயநிறைவு ஓய்வுநிலைப் பயிற்சியின் மூலம் உங்கள் உடலை தளர்த்திக் கொள்ளுங்கள்.
உங்கள் கவனத்தை உள்முகமாகத் திருப்பி, ஒரு கணம் உங்களை கவனித்துப் பாருங்கள்.
பின்னர், தெய்வீக ஒளியின் ஆதாரம் உங்கள் இதயத்தினுள் ஏற்கனவே இருக்கிறது என்றும், அது உள்ளிருந்து உங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது என்றும் பாவனை செய்துகொள்ளுங்கள்.
மென்மையாக அந்த உணர்வினுள் ஓய்வாக இருங்கள். உங்கள் உணர்வு வேறு எண்ணங்களை நோக்கி திசை மாறினால், அவற்றுடன் போராடவும் வேண்டாம், அவற்றை கண்டுகொள்ளவும் வேண்டாம். அவை இருந்து விட்டுப்போகட்டும், அதே சமயம் உங்கள் இதயத்திலிருக்கும் தெய்வீக ஒளியின் ஆதாரத்தின்மீது நீங்கள் தியானம் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று மட்டும் உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
தியானத்திலிருந்து வெளிவரத் தயாராக இருப்பதாக நீங்கள் உணரும் வரையில், உங்களுக்குள் மென்மேலும் ஆழ்ந்து லயித்துப்போவதற்கு உங்களை அனுமதியுங்கள்.
வெளிவரத் தயாரென நீங்கள் உணரும் வரையில், நீங்கள் எவ்வளவு நேரம் விரும்புகிறீர்களோ அவ்வளவு நேரம், இந்த ஆழ்ந்த அமைதி நிலைக்குள் லயித்திருங்கள்.

சுத்திகரிப்பு தான் சகஜ மார்க்கத்தின் தனிப்பட்ட சிறப்பு என்று நான் நினைக்கிறேன்.

 மதச்சடங்குகளில் கூட சுத்திகரிப்பு முறை இருக்கிறது என்றாலும் அது வெறும் மேலோட்டமாகவே உள்ளது. அவை உடலை சுத்தம் செய்து கொள்ளுதல், உள்ளத்தையும் கொஞ்சம் சுத்தமாக்கிக் கொள்ளுதல் என்று இப்படி இருக்கலாமே தவிர எனக்குத் தெரிந்த வரையில் அதைவிட அதிகமாகவோ, ஆழமானதாகவோ இல்லை. ஆகையால் தான் கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் செய்யப்படுகின்ற சடங்குகளெல்லாம் வெறும் சடங்குகளாக மட்டுமே இருந்திருக்கின்றன.

 அதனால்தான் நாம் அங்கே போய்விட்டுத் திரும்பி வரும்போது, ஆனந்தத்தையோ இலகுத்தன்மையையோ, அடைவதில்லை. 

ஆனால் ஒரு அப்யாசி சுத்திகரிப்பு செய்யும் ஒவ்வொரு முறையும் தவறாமல் ஆனந்தத்தையும் பாரம் குறைந்து லேசானது போன்ற உணர்வையும் அனுபவிக்கிறார்.  இதை நீங்கள் எல்லோரும் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள்.

சத்திகளே இல்லாத ஒருவரிடம் நாம் பிரார்த்திக்க வேண்டும் என்பது சற்று விசித்திரமாகத் தோன்றக்கூடும். 

ஆனால் சக்திகளை உடைய ஒருவர் அவற்றை இழந்து சக்தியற்றவராக ஆகிவிட வாய்ப்பு உண்டு. அதாவது மாறக்கூடிய ஒரு கடவுள் எத்தனைத்தான் உயர்ந்தவராக இருந்தாலும் அவரே மாறக்கூடிய நிலையில்தான் இருக்கிறாரேயன்றி மாறாக நிரந்தரமான ஒரு நிலையில் இல்லை.

இன்னொரு முக்கியமான உண்மை என்னவெனில் அது போன்ற கடவுளர்களே கூட பெயரற்ற உருவமற்ற குணங்களற்ற ஒன்றாகிய அழியாத மூலப்பொருளில் இருந்துதான் வந்திருக்கின்றனர் என்பதாகும். ஆகையால் அந்த இறுதிப் பரம்பொருள்தான் நமது லட்சியம். பாபூஜி அதனை மையம் என்று சொல்கிறார். அப்படிச் சொல்லும்போது அதில் சக்தியோ அல்லது மற்றும் இது போன்ற நம்மைக் குழப்புகின்ற கருத்துக்களோ எதுவும் இல்லை.

 ஒரு கடவுளைப்பற்றிப் பேசும்போது அவருடைய சக்திகளைப் பற்றி நினைக்கிறோம். மையத்தைப் பற்றி பேசும்போது இம்மாதிரியான கருத்துக்கள் எல்லாம் அற்றுப் போகின்றன.

 *-சாரிஜி, மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மாஸ்டரின் பங்கு.

*துணைப் புள்ளிகள்  பராமரிப்பு*  :

ஒவ்வொரு அப்யாசியின் பொறுப்பு: A,B,C,D

வரலாற்றுச் சுவடுகள்:

1945:  புள்ளிகள்  A,B – பாபூஜி மகராஜ் அவர்களின் கண்டுபிடிப்பு.  ஒளி உலகமே வியந்து போற்றியது.

லாலாஜி மகராஜ் அவர்கள், இதன் முக்கியத்துவத்தை, அடிக்கோட்டிட்டு, இதனைப் பயிற்சி செய்யாதவர்களின் ஆன்மீக முன்னேற்றம் தமது பொறுப்பாகாது என்று குறிப்பிட்டார்.

7 ஒளி வட்டங்களும், அதாவது மைய மண்டலத்தின் ஒளி வட்டங்கள் இருப்பது உண்மையில்,  புள்ளி A,B ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கிறது.  இதன் எதிரொளி, தலையின் பின்புறம் நிகழ்கிறது. அத்துடன் உண்மையான பிரம்மரேந்த்ராவும் இங்கே இருக்கிறது.  பன்வர் குஃபா

2011:  புள்ளிகள் C,D – தாஜி அவர்கள் கண்டுபிடிப்பு.  வெளியிடப்பட்டது 2015

இந்த நான்கு புள்ளிகளின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.  நமது மனம், உணர்ச்சிகள் ஆகியவற்றின் நிலைகள் அவற்றால் நடப்பவை.

`ஒளி உலக மென்குரல் 2011, மே 15  10 00 மணி காலை, புள்ளி C ஐ பற்றி குறிப்பிடுகிறது.   

இது ஒரு கேந்திரமான புள்ளி.  அனைத்தின் ஆரம்பம் அங்கே இருக்கிறது.  மனித பரிணாம வளர்ச்சி ரகசியத்தின் திறவு கோல் அது.

நேர்மறை, எதிர்மறை ஆகியவற்றின் அம்சங்கள் ஒரு சேர வருகின்றன.  தெய்வீக சட்டங்களுக்கு உட்பட்டு சமனிலைப் படுத்தப் படுகின்றன.

விருப்புக்கள் மற்றும் வெறுப்புக்கள்:

நிலையான நினைவு:  தியான நிலையை, தக்க வைப்பதும், அதனை விரிவாக்கம் செய்வதும், நாள் முழுக்க கொண்டு செல்வதும்.

காலை மற்றும் இரவு பிரார்த்தனை :     நாங்கள் இன்னும் ஆசைகளுக்கு அடிமைகளாக இருப்பது.

பதிவுகள் இந்த புள்ளிகளில் இடம் பெறுவது எவ்வாறு?

புள்ளி   C:                     பதிவுகள் அனைத்தும், முதலில் நுழையும் பாதை.    

நமது  பதில் வினைகள்,      விருப்பு அல்லது வெறுப்புக்கள்🡺  குறிப்பிட்ட அதிர்வுகள்  புள்ளி C .

மேலும்,  அவை சார்ந்திருப்பது:

பதில் வினைகளின் ஆழம்;  அந்த அதிர்வுகளின் இயல்பான சுழல் விளைவுகளின் தன்மை.

புள்ளி A:🡺 பொருள் சார் ஆசைகளின் இருக்கை.

உலக கவலைகள், ஆசைகள்

எதிர்கால வேலை அல்லது பணியின் முன்னேற்றம்

வருமானம் மற்றும் போனஸ்

வருமானம் வருமா அல்லது வராதா.

புள்ளி  B:  பேராவா/ பேராசை

புள்ளி  D:  மிகவும் கடினமான அதிர்வு –குற்ற உணர்வு   (செயல், செயல் படாமை)

உயர்          :    - தற்கால வாழ்க்கை ->  ஆழ்மனம் - உணர்வு மனம்

உணர்வு   :  - கடந்த காலம்/ எதிர்

கால வாழ்க்கை  -> ஆழ் மனம் -  உணர்வு மனம்

மனம்:

*

புள்ளி  A,B எல்லை அற்ற விதமாக விரிவாக்கம் ஆகக் கூடியது.  வெறும் பேரவா/பேராசை மட்டுமல்ல. அது அனைத்தும் உயர் உணர்வுறு நிலை பற்றியது.   பேரவா/பேராசைகளை நீக்க முடியும் என்ற கருத்து வரம்பு மிகவும் குறைவானது. இது பேராசையை நீக்கி விட்டால்  புள்ளி A,B எல்லை அற்ற விதமாக விரிவாக்கம் ஆகிவிடும்.

ஆனால் ஆசைகள், பேராசைகள் இவை  புள்ளி  A,B  அடர்ந்து இருக்கின்றன.  எனவே அவை கருந்துளை போல செயல்படுகின்றன.  அங்கே இருக்கும் வெற்றிடத்தின் ஆற்றல் அளப்பரியது.  அவை நமது உணர்நிலையை இறுகப் பற்றி இருக்கின்றன.

இந்த ஆசைகளையும், பேராசைகளையும்  விடுவித்து விட்டீர்கள் என்றால், முழுமையான விரிவாக்கம் ஏற்படுகிறது.   அது இயற்கையான விளைவாகும். இதன் காரணமாகவே நாம் புள்ளி B இல் சுத்திகரிப்பும்,  புள்ளி A இல் தியானமும் செய்து வருகின்றோம். அது ஏதோ பேராசை என்பதால் அல்ல. பிரதான விஷயம்  உயர் உணர்வுறு நிலை அல்லது சூப்பர் மனம் என்பதாகும்.

புள்ளிகள் A, B  ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து விட்டால்,  நீங்கள் உங்களைத் தகுதி ஆக்குகிறீர்கள். அதாவது சூப்பர் மனம் – உணர்வு நிலைக்குச் செல்ல தகுதியாக்குகிறீர்கள்.  (ராஜ யோகத்தின் செயல் திறன்)

இதுவே ரிஷிகளும், விடுதலை அடைந்த ஆன்மாக்களும் இறங்குகின்ற இடம் ஆகும்.

புள்ளி A  -- (கவலை, உலக  ஆசைகள்)

புள்ளி A ஒளிர்ந்தாக வேண்டும்.

புள்ளி A தியானம் படுக்கை நேர பிரார்த்தனைக்கு முன்பாக செய்யப்படுதல் வேண்டும்.  “உலகத்தில் உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் எனது சகோதரர்கள், சகோதரிகள்.”

சகோதரிகள்:  எல்லா தெய்வீகப் பரிசுகளும் உங்களிடம் இருக்கின்றன.  உலகத்தில் இருக்கும் எல்லா ஆண்களும், பெண்களும் தங்களை சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் நினைக்கின்றார்கள்.  உங்களது எண்ணம் அவர்களோடு ஒன்றாக இருக்கின்றது.

இந்தக் கருத்தில் எண்ணத்தை வைத்திருப்பது, மாஸ்டர் சொல்லி இருக்கின்ற படி வைத்திருப்பது, நமது கடமை.  

இந்த தியானம் குறுகியது. ஆனால், திறன் மிக்கது.

சுயமாக ஏற்படுத்திய சுபாவங்கள் சரியாகும்

பிரபஞ்ச சகோதரத்துவத்தை வளர்க்கும்

அனைவரிடமும் ஒருமைப் பாட்டை ஏற்படுத்தும்.

புள்ளி B சுத்திகரிப்பு

புள்ளி B தியானம்.  கற்பனை செய்திடுங்கள். உங்களது அனைத்துவிதமான மாசுக்களும், கடினத்தன்மைகளும் புள்ளி B இல் இருந்து வெளியேறுகின்றன. அதற்குப் பின்னால் இருந்து, ஒளிருகிறது ஆன்மா. அது புலப்படவும் செய்கிறது.

காலை தியானத்துடன் செய்ய வேண்டியது.

நியமம் 10  ( புள்ளி D)

படுக்கை நேரத்தில்,  கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து, தெரியாமல் செய்த தவறுகள் ஏதேனும் இருந்தால், அவற்றுக்காக மனம் வருந்திடுக.   மன்றாடுகின்ற மன நிலையில் மன்னிப்பு கோருக. பிரார்த்தனையோடு ஒரு தீர்மானம் செய்க; மீண்டும் அவ்வாறாக செய்ய மாட்டேன் என்று தீர்மானம் கொள்க.

தவறுகள் ஏன் வருகின்றது நம்மிடம்:

விஷயங்கள் சீக்கிரம் நடக்க வேண்டும்.

பேராசை/ ஆசைகள்

அகங்காரம்

உற்றார் உறவுகளிடம் சண்டை.

நியமம் 10 : மேலும் விவரங்கள்.

உதவி அற்ற தன்மை : அகங்காரம் கரைகிறது,  சேவகன் மனப்பான்மை; சரணாகதி-> பாதை எளிதாகிறது.

படுக்கை நேரம். இயல்பாக மனநிறைவு நிலை

பிராத்தனை மனோபாவம் (பிரார்த்தனை அல்ல)

அடுத்தவரை மன்னிதல்:  மாபெரும் மாஸ்டரிடம் இருந்து நாம் மன்னிப்பு கேட்கும் முன்பாக

உறுதி எடுத்தல்: மீண்டும் செய்வதில்லை.  (சுயபரிணாம வளர்ச்சி அப்போதுதான் உருவாகும்)

தெரியாமல் செய்த தவறுகள்.

ஸ்ரீ கிருஷ்ணா

பகவான் கிருஷ்ணர் சொல்கிறார் கீதையில்.

ஆசைகள் நிறைவேற வில்லை🡺 அமைதி இல்லை 🡺கோபம் 🡺பயம்🡺=>விவேகம் போய் விட்டது.

அத்தியாயம்:2:62 மற்றும் 2:63

புள்ளிகள் A,B,C,D ஆகியவற்றில் உள்ள அதிர்வுகள் படிபடியாக குடி புகுந்து,  அல்லது அடர்ந்து, கடினத்தன்மையை உற்பத்தி செய்யும்.

காலம் செல்கிறது.  கடினத் தன்மை, அடர்ந்து விடுகிறது.  ஆவியாகிறது. குடியேறுகிறது இதர புள்ளிகளில்!

பல் வேறு புள்ளிகள்:

சகஜ மார்க்க யாத்திரை, புள்ளி 1 ல் ஆரம்பித்து 2,3,4 வழியே 13 வரைக்கும் செல்கிறது.

உணர்வு நிலை மட்டம் வேறுபடும்—ஒவ்வொரு புள்ளியிலும்.  அவ்வாறே குணமும், நிலையும், அனுபவங்களும் வேறுபடும்.

புள்ளிகள்

1=🡺 மஞ்சள் – பக்தியின் பொக்கிஷம் – ஆசைகள் – மனநிறைவு –கடவுள் உங்களிடமும், அவரை எல்லா இடங்களிலும் உணர்தல் – பூமி – இதய சக்கரம்

2=🡺 சிவப்பு – பக்தியின் மகாசமுத்திரம்  - பரிதவிப்பு – சமாதானம் – சமாதானம், இலகுத் தன்மை- பிரபு ஜீசஸ் புள்ளி – ஆகாயம், வெற்றிடம், ஆன்ம சக்கரம்.

3=🡺 வெள்ளை – பக்தியின் நெருப்பு  - கோபம் – அன்பு உணர்ச்சிகள் – நெருப்பு – தூய்மையாக்கல் மற்றும் உருகுதல்

4 =🡺 கருப்பு – பயம் – தைரியம், விவேகம் – ஆறுதல் அமைதி – தண்ணீர் – உள்முகம் செல்லுதல்

5=🡺 பச்சை  - சந்தேகம் – தெளிவு -   ஆழ் அமைதி - காற்று – தெளிவு, நுட்பம்.

புள்ளி 1 ஐ, பாபூஜி அவர்கள் இரண்டு பகுதிகள் ஆக்குகிறார்.  மேலே, கீழே. கீழ்ப் பகுதியில், கடவுளின் பிரசன்னத்தை உங்களுள் உணர்வீர்கள் அதுவும் எப்போதும்.  மேலே நீங்கள் சென்றால், கடவுளை உணர்வீர்கள் – அனைத்து இடங்களிலும். இதுவே முதலாம் புள்ளியில் குணாம்சம்.

அதனை சுற்றி, 1 வது புள்ளியைச் சுற்றி இருப்பவை. A,B,C,D புள்ளிகள்.

புள்ளிகளின் இருப்பிடத்தையும், முக்கியத்துவமும்,

நமக்குத் தெரிய வேண்டியது ஏன்?

நாம் விழிப்பு உணர்வோடு இருப்போம்

விழிப்புணர்வு வந்தால், பதிவுகள் சேர்வதைக் கவனிக்க முடியும்.

நாம் நம்மை சரி செய்ய முடியும்

நம்மைச் சுத்திகரிப்பது பிரதானம் ஆகிடும்.  எல்லா நேரங்களிலும் சூழலை முடிவு செய்வது/ வெளியே அலைந்து திரிவது  ஆகியவை மாறி விடும்.

சுய தன்மை மாற்றத்திற்கான கருவி.

தன்னை ஏற்றுக் கொள்ளுதல்.

🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
[9/1, 18:10] Hf Neelavathi: 168. நினைவு கூர்வோம்.

      யாரொருவருடைய பேச்சு மரியாதையுடனும் நாகரீகமாகவும் பண்பாட்டுடனும் இருக்கிறதோ, அவருக்கு தூய்மையும் மேன்மையும் பொருந்திய பெரிய இதயம் இருக்கிறது. அதனால் மற்றவர்கள் மனதின் மீது மிகப்பரந்த ஆதிக்கம் இருக்கிறது. மனித வாழ்வின் லடசியத்தை அடைவதற்கு முன் தேவை மரியாதை யுடன் பேசுவதேயாகும். பண்பான பேச்சு இதய சாம்ராஜ்யத்தை ஆழ்கிறது .ஒரு பண்பட்ட பேச்சு மனித சமுதாயத்தைக் கவர்ந்து தலை சிறந்து விளங்குகிறது.

விதியை வடிவமைத்தல்.
          2-1-2019.
[9/3, 09:48] Hf Neelavathi: இதயநிறைவு
சுத்திகரிப்பு

அன்றைய நாளின் உங்கள் வேலைகள் முடிந்த பிறகு, சுத்திகரிப்பு பயிற்சியை செய்யவும், உறங்கச் செல்லும் நேரத்தை ஒட்டி இதைச் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த செயல்முறை உங்களுக்கு புத்துணர்வூட்டி, உங்களுக்குள் சேகரிக்கப்பட்டிருக்கும் கடினத்தன்மை எதையும் உங்கள் அமைப்பிலிருந்து சுத்திகரிக்கும். சுத்திகரிப்பு செயல்முறைக்கு சில படிகள் இருக்கின்றன, எனவே ஆரம்பத்தில் பின்வரும் வரிசைப்படி அவற்றை பயிற்சி செய்வது சிறந்தது:

அன்றைய நாள் முழுவதும் சேகரிக்கப்பட்ட பதிவுகள் அனைத்தையும் நீக்கும் எண்ணத்துடன், ஒரு சௌகரியமான நிலையில் அமர்ந்து கொள்ளுங்கள்.
கண்களை மூடிக்கொண்டு உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள்.
சிக்கல்கள் மற்றும் மாசுகள் யாவும் உங்களது மொத்த அமைப்பிலிருந்தும் வெளியேறிக்கொண்டிருக்கின்றன என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அவை உங்கள் முதுகுப்புறத்திலிருந்து, அதாவது உங்கள் உச்சந்தலையிலிருந்து முதுகுத்தண்டின் இறுதி எலும்புவரை உள்ள பகுதியிலிருந்து புகைவடிவில் வெளியேறட்டும்.
இந்த முழு செயல்பாடும் நடைபெறும்போது எழும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் பற்றி ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிராமல், விழிப்புடன் இருங்கள் உங்கள் எண்ணங்களுக்கு ஒரு சாட்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
இந்த செயல்பாட்டை நம்பிக்கையுடனும், உறுதியுடனும் மென்மையாக துரிதப்படுத்துங்கள்.
உங்கள் கவனம் திசைமாறி, மற்ற எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றினால், மென்மையாக உங்கள் கவனத்தை சுத்திகரிப்பை நோக்கித் திருப்புங்கள்.
பதிவுகள் உங்களது முதுகுப்புறத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் உங்களுக்குள் லகுத்தன்மையை உணர ஆரம்பிப்பீர்கள்.
இந்த செயல்முறையை இருபதிலிருந்து இருபத்து ஐந்து நிமிடங்கள் வரை தொடருங்கள்.
உள்ளார்ந்த லகுத்தன்மையை உணர்கையில், நீங்கள் இச்செயல்முறையின் இரண்டாவது பகுதியை செய்யத் தொடங்கலாம்.
மூலஆதாரத்திலிருந்து வரும் தூய்மையின் பிரவாகம் உங்கள் அமைப்பின் முன்புறமாக நுழைவதை உணருங்கள். இந்தப் பிரவாகம் உங்கள் இதயத்தினுள்ளும் உங்கள் மொத்த அமைப்பினூடேயும் பாய்ந்து, உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் நிரம்புகிறது.
நீங்கள் இப்போது மிகவும் சமன்பட்ட நிலைக்குத் திரும்பியிருக்கிறீர்கள். உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் லகுத்தன்மையையும், தூய்மையையும், எளிமையையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
சுத்திகரிப்பு பயனளிக்கும் விதத்தில் நிறைவுசெய்யப்பட்டுள்ளது என்ற திடநம்பிக்கையுடன் முடித்துக்கொள்ளவும்.
[9/3, 09:48] Hf Neelavathi: இதயநிறைவு
பிரார்த்தனை

உறங்கச் செல்லும் முன், மூலஆதாரத்துடன் இணைத்துக்கொள்ளும் விதமாக, இரவு நேரத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒரு பிரார்த்தனை இது. இதற்கு சுமார் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் ஆகலாம். காலை தியானத்திற்கு முன்னரும், இது சமர்ப்பிக்கப்படுகிறது.
வார்த்தைளை ஆராய்ச்சிசெய்ய முயல்வதற்கு பதிலாக, உங்கள் இதயத்தில் அவை ஒத்ததிர்வதை உணர்ந்து, அதன் உண்மையான அர்த்தத்தின் மீது பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். அதன் அர்த்தம் உள்ளிருந்து வெளிப்படட்டும். அதில் உங்களையே இழந்துவிட முயற்சி செய்யுங்கள். வார்த்தைகளுக்கும் அப்பால் சென்று, அதன் உணர்வு உங்களிடம் வருவதை அனுமதியுங்கள்.
உறங்கச் செல்கையில், வசதியாக அமர்ந்து, உங்கள் கண்களை மென்மையாக மூடிக்கொண்டு, ஓய்வாக இருங்கள். அமைதியாகவும் நிதானமாகவும் பிரார்த்தனையை திரும்பக் கூறுங்கள்:

ஓ மாஸ்டர்! மனித வாழ்வின் உண்மை லட்சியம் நீரே.
நாங்கள் இன்னும் ஆசைகளுக்கு அடிமைகளாக இருப்பது எங்கள் முன்னேற்றத்தை பாதிக்கிறது.
எங்களை அந்நிலைக்கு இட்டுச் செல்லும் ஒரே தெய்வமும் சக்தியும் நீரே.

இப்போது, இந்த வார்த்தைகளை இரண்டாவது முறை அமைதியாகத் திரும்பக்கூறி, இந்த உணர்வினுள் இன்னமும் ஆழ்ந்து செல்லுங்கள். வார்த்தைகளுக்கும் அப்பால், உணர்வினுள் லயித்துப்போவதற்கு உங்களை அனுமதியுங்கள். நீங்கள் உறங்கச் செல்லும்போது, இந்த பிரார்த்தனை நிறைந்த தியான நிலையில் உருகிக் கரைவதற்கு உங்களை அனுமதியுங்கள்
காலையில், இதயநிறைவு தியானத்தை ஆரம்பிப்பதற்கு முன், இந்த பிரார்த்தனையை அமைதியாக ஒருமுறை சமர்ப்பித்து, உங்களை மீண்டும் இணைத்துக்கொள்ளுங்கள்.
[9/3, 09:48] Hf Neelavathi: இதயநிறைவு
தியானம்
கவனம் சிதறடிக்கப்படாமல் நீங்கள் தியானம் செய்யமுடிகின்ற ஒரு இடத்தை - தினமும் ஒரே இடத்தையும், ஒரு குறித்த நேரத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது. உங்கள் அலைபேசி மற்றும் பிற மின்னணு சாதனங்களை நிறுத்தி வையுங்கள். உங்கள் முதுகு நிமிர்ந்து இருக்குமாறு, ஆனால் விறைப்பாக இல்லாத விதத்தில் அமருங்கள்.
சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கண்களை மென்மையாக மூடிக்கொண்டு ஓய்வாக இருங்கள்.
தேவைப்பட்டால் இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொண்டு, இதயநிறைவு ஓய்வுநிலைப் பயிற்சியின் மூலம் உங்கள் உடலை தளர்த்திக் கொள்ளுங்கள்.
உங்கள் கவனத்தை உள்முகமாகத் திருப்பி, ஒரு கணம் உங்களை கவனித்துப் பாருங்கள்.
பின்னர், தெய்வீக ஒளியின் ஆதாரம் உங்கள் இதயத்தினுள் ஏற்கனவே இருக்கிறது என்றும், அது உள்ளிருந்து உங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது என்றும் பாவனை செய்துகொள்ளுங்கள்.
மென்மையாக அந்த உணர்வினுள் ஓய்வாக இருங்கள். உங்கள் உணர்வு வேறு எண்ணங்களை நோக்கி திசை மாறினால், அவற்றுடன் போராடவும் வேண்டாம், அவற்றை கண்டுகொள்ளவும் வேண்டாம். அவை இருந்து விட்டுப்போகட்டும், அதே சமயம் உங்கள் இதயத்திலிருக்கும் தெய்வீக ஒளியின் ஆதாரத்தின்மீது நீங்கள் தியானம் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று மட்டும் உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
தியானத்திலிருந்து வெளிவரத் தயாராக இருப்பதாக நீங்கள் உணரும் வரையில், உங்களுக்குள் மென்மேலும் ஆழ்ந்து லயித்துப்போவதற்கு உங்களை அனுமதியுங்கள்.
வெளிவரத் தயாரென நீங்கள் உணரும் வரையில், நீங்கள் எவ்வளவு நேரம் விரும்புகிறீர்களோ அவ்வளவு நேரம், இந்த ஆழ்ந்த அமைதி நிலைக்குள் லயித்திருங்கள்.
[9/3, 09:48] Hf Neelavathi: இதயநிறைவு
நிலையான நினைவு

இதில் முதல் கட்டமானது, தியானத்தின்போது, ஆன்மீக ஊட்டம் நமக்கு அருளப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு போதுமான அளவு கூருணர்வு படைத்தவர்களாக ஆவதும், பிறகு அதைத் தக்கவைத்துக்கொண்டு, அதைப் பேணிப்பாதுகாத்து – ‘முயன்று அதைப் பெற்று, அதற்கு உயிரூட்டி, அதை உட்கிரகித்துக்கொண்டு, அதனுடன் ஒன்றுகலந்து, இறுதியில் ஒரு ஐக்கிய நிலையை அடைவது (or AEIOU)’ ஆகியவற்றை உள்ளடக்கிய விதத்தில் அதை வளர அனுமதிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுமாகும். நம்முடன் அது ஒன்றுகலக்கும் விதத்தில், அதை நாம் பத்திரமாகப் பாதுகாக்கிறோம். அதனுடன் நாம் ஐக்கியமாகிறோம்.
தியானத்திற்குப் பிறகு, உள்முகமாக நம்மைக் கூர்ந்து கவனித்து, நமது நிலையை அடையாளம் கண்டு, அதனுடன் ஒன்றுகலந்து, அதனை ருசித்து அனுபவித்து, அதற்கு உயிரூட்டி, அதை நம்முடையதாக்கிக்கொள்ள முயற்சி செய்வதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. பிறகு, வளர்வதற்கானதொரு வாய்ப்பு அதற்கு உள்ளது. காலை தியானத்தின்போது, ஒரு குறிப்பிட்ட அளவிலான உணர்வுறுநிலையை நாம் அடைகிறோம். அதை விடாது பற்றிக்கொண்டு, நமது அன்றாட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளும்போது, காலை தியானத்தின்போது பெற்ற நிலையின் மீது, ஒரு முழுமையான பிடிப்பினை, கண்கள் திறந்த நிலையில், நாம் தக்கவைத்துக்கொள்கிறோம்.
உங்களது கண்களைத் திறந்த வண்ணம், அந்த தியான நிலையில் நீடித்திருக்க முயற்சி செய்யவும். உங்கள் இதயத்தில் உங்களை மையப்படுத்திக்கொண்டு, உணர்ந்தறியக்கூடிய நிலையில் இருந்து, உங்கள் இதயத்தால் விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களைச் சுற்றிலும் உள்ள விஷயங்களை நீங்கள் கூர்ந்து கவனிக்கும்போது, உங்கள் கவனத்தை  இதயத்திலேயே வைத்திருக்கவும். உங்களது உள்முக தொலைநோக்குப் பார்வை (radar) திறக்கட்டும். பேணி வளர்க்கப்பட வேண்டிய பழக்கம் இதுவே!
தியான நிலை மேலும் ஆழ்ந்து சென்று, நிலையான நினைவாக ஆகும்போது, உணர்வுறுநிலையின் முழு கற்றையும் (spectrum), உங்களது ஜீவிதத்தின் அஸ்திவாரமாக, உங்களது மையத்துடன் தொடர்பில் இருக்கிறது; மேலும், காலப்போக்கில், அஸ்திவாரமாக இருக்கும் இந்தத் தொடர்பு, அன்பாக மலர்கிறது. வழிகாட்டியானவர் நமக்கு உதவ வருகிறார். இறைவனின் ஆளுமைக்குட்பட்ட இந்தப் பிரதேசத்தில், அவர் அனுபவம் வாய்ந்தவராகவும், சௌகர்யமான நிலையிலும் உள்ளார்; ஆகவே, நமது கவனத்தை ‘நான்’ என்பதிலிருந்து ‘நாம்’ என்பதை நோக்கி அவர் மென்மையாகத் திருப்புகிறார். இந்த ‘நான்’ மற்றும் ‘நாம்’ எனும் இயக்கவியல் வளர்ந்து, உணர்வுறுநிலையின் பல மட்டங்களினூடே காலப்போக்கில் விரிவடைகிறது. உணர்வுறுநிலையின் இந்த மட்டங்களினூடே நாம் கடந்து செல்கையில், மனிதமட்டத்தில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடிவதும் அவருடன்தான். அவரது பிராணாஹுதியின் மூலமாகவும், அவரது ஆதரவின் மூலமாகவும் எந்த அளவு அதிகம் அவர் நமக்கு உதவுகிறாரோ, அந்த அளவு, நமது கவனம் பரிசுகளிலிருந்து பரிசளிப்பவரை நோக்கி நகர்கையில், அவருடைய உதவியை அதிகமாக நாம் பெறப் பெற, அவர்மீது அதிக நன்றியுணர்வு படைத்தவர்களாக நாம் உணர்கிறோம். இந்த நன்றியுணர்வானது, அவரை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகொள்ள வைக்கிறது, சிறிது காலத்திற்குப் பின், அன்பும் உதயமாகிறது. ஒரு கட்டத்தில், மிகுதியான அன்பினை நாம் உணர்கிறோம், அது எவ்விதம் நிகழ்ந்தது என்பது நமக்குத் தெரிவதில்லை. நாம் நேசிப்பவர்களை நாம் எப்போதும் நினைவில்கொள்வதுபோல், அதன் மறு பக்கமும் உண்மையானதே: நாம் அதிகமாக நினைவுகொள்கையில், அதிகமான அன்பு வளர்கிறது.
[9/3, 09:48] Hf Neelavathi: இதயநிறைவு
A மற்றும் B புள்ளி

A புள்ளியில் தியானம்
அனைவருடனும் ஒற்றுமையை கொண்டுவரும் விதமான ஒரு உலகளாவிய சகோதரத்துவ உணர்வை வளர்ப்பதற்காக, நாம் A புள்ளியில் தியானம் செய்கிறோம். இத்தியானம், இரவுப் பிரார்த்தனைக்கு முன், ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு மிகாமல் செய்யப்பட வேண்டும்.
ஆண்களுக்கான முறை: உலகிலுள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் உங்களது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் என்ற எண்ணத்துடன், A புள்ளியில் உங்கள் கவனத்தை நிலைநிறுத்தவும். நீங்கள் A புள்ளியில் தியானம் செய்யும்போது, இது உண்மை என்ற நம்பிக்கையுடன், இதை உங்கள் எண்ணத்தில் கொண்டிருக்கவும். இது இதயபூர்வமாக பயிற்சி செய்யப்படுமெனில், இதன் விளைவை உடனடியாக நீங்கள் காணலாம்; இந்த விளைவு நிரந்தரமானதாகவும் இருக்கும்.
பெண்களுக்கான முறை: அனைத்து தெய்வீகப் பரிசுகளும் உங்களுக்கு கிடைத்திருப்பதாகவும், உலகிலுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் தாங்கள் சகோதர சகோதரிகள் என்று எண்ணுவதாகவும், உங்களுடைய எண்ணம் அவர்களுடைய எண்ணத்தை ஒத்திருப்பதாகவும் எண்ணவும்.
[9/3, 09:48] Hf Neelavathi: இதயநிறைவு
இரவு 9 மணி பிரபஞ்சமளாவிய பிரார்த்தனை உள்ளிட்ட, பிரார்த்திக்கும் மனோபாவத்துடனான சங்கல்பங்கள்

நம்மைச் சூழ்ந்துள்ள, காற்றுத் துகள்கள், மனிதர்கள், பறவைகள், மரங்கள்... நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் கடவுளின் நினைவில் ஆழ்ந்து லயித்துள்ளன. அனைத்தும் மூலஆதாரத்துடன் இரண்டறக்கலந்து, அதிகமான அமைதியையும், மிதத்தன்மையையும் வளர்த்து வருகின்றன.
அனைவரும் நற்சிந்தனை, சரியான புரிந்துகொள்ளுதல் மற்றும் வாழ்க்கையில் நேர்மையான அணுகுமுறை ஆகியவற்றை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்கள், செயல்பாட்டில் சரியான அணுகுமுறையையும், நடத்தையில் பூரணத்துவத்தையும் அடைகிறார்கள்.
பிரபஞ்சமளாவிய பிரார்த்தனை: அனைவரும் அன்பாலும் பக்தியாலும் நிரப்பப்படுகிறார்கள் மற்றும், அவர்களுள் உண்மையான நம்பிக்கை வலுவடைந்து வருகிறது என்ற எண்ணத்துடன் 15 நிமிடங்கள் தியானம் செய்யவும்.
பரம்பொருளுக்காக ஏங்கித் தவிக்கும் அனைவரும் சகஜ மார்க்கத்தை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.
[9/3, 09:48] Hf Neelavathi: B புள்ளியில் சுத்திகரிப்பு
இந்த செயல்முறை காலையில் நீங்கள் விழித்தெழுந்தவுடன், காலை தியானத்திற்கு முன்னர், ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும்.
B புள்ளியில் உங்கள் கவனத்தை நிலைநிறுத்தி, அனைத்து மாசுகளும் கடினத்தன்மைகளும் B புள்ளியிலிருந்து உடலின் முன்புறமாக வெளியேறுவதாகக் கற்பனை செய்யவும். இந்த செயல்முறை நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, ஆன்மாவின் ஒளி பின்புறமிருந்து வெளிப்படத் தொடங்குவதாகக் கற்பனை செய்யவும்.